கனிமொழியின் உதவியாளர் மகன் படப்பாடலை வெளியிட்ட கார்த்தி!


கனிமொழியின் உதவியாளர் மகன் படப்பாடலை வெளியிட்ட கார்த்தி!

அறிமுக நாயகன் ஷிரிஷ் நடிக்து உருவாகியுள்ள படம் ‘மெட்ரோ’. இவரின் தந்தை கனிமொழி அவர்களிடம் உதவியாளராக இருக்கிறாராம். மகனின் ஆர்வத்தை கண்ட தந்தை மகனை இப்படத்தில் ஹீரோவாக்கி இருக்கிறார்.

இப்படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார் பாபி சிம்ஹா. இவர்களுடன் சென்ட்ராயன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹெல்மெட் அணிந்து பெண்களின் நகைகளை அறுக்கும் குற்றவாளிகளை பற்றிய படமாக இது உருவாகியுள்ளது.

விதார்த் நடித்த ஆள் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இப்படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவில் ஜோஹன் இசையமைத்திருக்கிறார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் கானா பாலா பாடிய ‘பூமி’ என்ற பாடலை மட்டும் ஷிரிஷின் வீட்டுக்கே சென்று நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.