நேற்று ‘தல-தளபதி’… நாளை ‘தலைவர்-தல’ போட்டி… என்னாகுமோ..?


நேற்று ‘தல-தளபதி’… நாளை ‘தலைவர்-தல’ போட்டி… என்னாகுமோ..?

அஜித்-விஜய்…. இவர்கள் நண்பர்களாக பழகி வந்தாலும், இவர்களது ரசிகர்களுக்கிடையே எப்போதும் கடும் போட்டி நிலவி வருகிறது.

தெருக்களில் தொடங்கிய இந்த பிரச்சினை இணையங்களிலும் தொடர்கிறது.

இந்நிலையில் நாளை ரஜினியின் கபாலி டீசர் வெளியாகவுள்ளது. மேலும் நாளை அஜித்தின் 44வது பிறந்தநாள் தினமாகும்.

எனவே, இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகருக்கான ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கருணாகரன் கபாலி டீசர் குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்… ரசிகர்களின் வெறித்தனமான ஆவலை பார்க்கும்போது, யுடியூப் சர்வர்கள் தாங்குமா? எனத் தெரிவித்துள்ளார்.

இதுநாள் வரை தல-தளபதி என்ற பிரச்சினை இருந்தது. நாளை தலைவர்-தல என்ற போட்டி உருவாகியுள்ளது.

விஜய், அஜித் உள்ளிட்ட பெரும்பாலான நடிகர்கள் ரஜினியின் ரசிகர்கள்தான். அப்படியிருக்கும் நிலையில் நாளை, ‘வேதாளம்’ மற்றும் ‘தெறி’ டீசர்களின் சாதனைகளை ‘கபாலி’ உடைத்தெறியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…