சமுத்திரக்கனியின் ‘சாட்டை’யை கைப்பற்றிய கபாலி வில்லன்..!


சமுத்திரக்கனியின் ‘சாட்டை’யை கைப்பற்றிய கபாலி வில்லன்..!

எம்.அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன், மஹிமா நம்பியார், ஜீனியர் பாலையா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘சாட்டை’.

ஷாலோம் ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தையும் இதே நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

அறிமுக இயக்குனர் கெளதம் ‘சாட்டை 2′ படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த தம்பிராமையா இதிலும் தொடர்கிறார்.

சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் கிஷோர் நடிக்கவுள்ளார். இவர் சமீபத்தில் கபாலி டீசரில் ரஜினியை மிரட்டியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.