மக்கள் முன்னிலையில் ரஜினிகாந்த்… நாசர் தீட்டும் திட்டம்..!


மக்கள் முன்னிலையில் ரஜினிகாந்த்… நாசர் தீட்டும் திட்டம்..!

நடிகர் சங்கம் நடத்தும், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நாளை காலை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.

இதன் நேரடி ஒளிப்பரப்பு காலை 10 மணி முதல், சன் டிவியில் ஒளிப்பரப்பாகிறது.

இதில், அஜித், சிம்பு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இந்திய சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்ளவிருப்பதால், பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

அதனால், அண்மையில் பத்மவிபூசன் பெற்ற ரஜினிகாந்த்துக்கு மக்கள் முன்னிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்க சங்கத் தலைவர் நாசர் திட்டமிட்டுள்ளாராம்.