‘தொகுப்பாளினிகள்… யூடியுப் பார்வையாளர்கள்..’ ரவுண்டு கட்டிய ராதாரவி..!


‘தொகுப்பாளினிகள்… யூடியுப் பார்வையாளர்கள்..’ ரவுண்டு கட்டிய ராதாரவி..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இறைவி படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் இப்படத்தில் நடித்துள்ள ராதாரவி பேசினார். அதில்…

நிறைய படங்களில் வில்லனாக நடித்துவிட்டேன். ஆனால் இதில் ரொம்ப நல்லவனாக நடித்திருக்கிறேன்.

நான் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.

சமீபத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் உதயநிதியுடன் நடித்த மனிதன் படம் வெளியானது.

சமீபகாலமாக என் மேடை பேச்சுகள் டியூடிப்பில் பகிரப்பட்டு வருகிறது. அதில் பேசிய பேச்சு போலவே படத்தில் பேச வேண்டும் என்றார் மனிதன் இயக்குனர்.

சினிமாவில் எனக்கு இன்னமும் சான்ஸ் வருவதற்கு யூடியுப்தான் காரணம்.

இங்கு பேசவந்த தொகுப்பாளினி மற்ற நடிகர்களின் பெயரை குறிப்பிட்டாலும் என் பெயரை சொல்ல கூடவில்லை. மற்றும் பலர் லிஸ்ட்டில் சேர்த்து விட்டார்.

எந்தவொரு ஹோம்ஒர்க் செய்யாமல் மேடையேறி வந்து பேசி விடுகின்றனர். ராதாரவி யார்? எந்த நிகழ்ச்சி என்பதை தெரிந்து கொண்டு பேசவேண்டும்.

அழகு முக்கியமல்ல. அறிவுதான் முக்கியம். நான் படத்தில் நடிக்க சென்றால் ஹோம் ஒர்க் பிராடிக்ஸ் செய்யாமல் செல்வது இல்லை.” என்றார்.