சந்தானம்-ஆஷ்னா ஷாவேரி திருப்பதியில் ரகசிய திருமணம்?


சந்தானம்-ஆஷ்னா ஷாவேரி திருப்பதியில் ரகசிய திருமணம்?

சில வருடங்களுக்கு முன்பு சந்தானத்தின் மூன்று அல்லது ஐந்து படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகும். இவர் இல்லாத படங்களே இல்லை என்றளவில் தமிழ் சினிமா இருந்து வந்தது. இவரும் அதற்கேற்ப தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருந்தார். ஆனாலும் இவருக்கு கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தனர்.

பின்னர் இவர் தனி ஹீரோவாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் வெற்றியடையவே ‘இனிமே இப்படித்தான்’ என்றார். அதாவது இனி காமெடி வேடங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு இவரும் வந்தார்.

இந்நிலையில் இன்று சில மணி நேரங்களுக்கு வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் சந்தானம் ஒரு நடிகையை திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் புகைப்படத்துடன் வெளியானது. அதில் இவரும் இவருடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஆஷ்னா ஸாவேரியும் இடம் பெற்றிருந்தனர்.

இதுகுறித்து விசாரித்த போது… “எந்தவொரு புதிய படம் தொடங்கினாலும் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய செல்வது வழக்கம். அதுபோல தற்போதும் படக்குழுவுடன் சென்றோம். அந்த புகைப்படங்களைத்தான் தற்போது நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்” என்கிறார்கள் சந்தானம் தரப்பினர்.