விஜய்சேதுபதியுடன் இணையும் தனுஷ்-சிவகார்த்திகேயனின் நண்பர்..!


விஜய்சேதுபதியுடன் இணையும் தனுஷ்-சிவகார்த்திகேயனின் நண்பர்..!

நம் கை விரல்களின் எண்ணிக்கையை விட, விஜய்சேதுபதி கைவசம் நிறைய படங்கள் உள்ளது. மனிதரும் சளைக்காமல் படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

இவரது நடிப்பில் இறைவி, தர்மதுரை, மெல்லிசை, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இதனையடுத்து, ‘வா டீல்’ பட இயக்குனர் ரத்தின சிவா இயக்கும் ரெக்க படத்தில் நடிக்கவிருக்கிறார்.

லட்சுமி மேனன் இவரின் ஜோடியாக நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இவர் விஜய், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் நண்பராக நடித்தவர் என்பது தாங்கள் அறிந்ததே.

‘ரெக்க’ படத்தின் துவக்க விழா நாளை நடைபெறவிருக்கிறது. மே 11ஆம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.