‘வாலிப ராஜா’வின் அடுத்த டார்கெட் “ஆளுக்கு பாதி 50-50″


‘வாலிப ராஜா’வின் அடுத்த டார்கெட் “ஆளுக்கு பாதி 50-50″

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா ஆகிய படங்களை தொடர்ந்து “ஆளுக்கு பாதி 50-50″ என்ற படத்தில் நடித்து வருகிறார் சேது. இவரின் ஜோடியாக 144 படத்தில் நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்.

இவர்களுடன் பாலசரவணன், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன், மதன்பாபு, ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய், நான் கடவுள் ராஜேந்திரன், முண்டாசுப்பட்டி முனிஷ்காந்த், யோகி பாபு உள்ளிட்ட காமெடி பட்டாளம் நடிக்கிறது.

R.K.பிரதாப் ஒளிப்பதிவு செய்ய, தரன் இசையமைக்கிறார். V.N.ரஞ்சித் குமார் இப்படத்தை தயாரிக்க அறிமுக இயக்குனர் கிருஷ்ண சாய் இயக்குகிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“இன்று மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஓடோடி உழைத்து வருகின்றனர். எனவே அவர்களது கவலையை மறக்கவே, முழுநீள காமெடி படத்தை உருவாக்கி வருகிறோம்.

சென்னை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.