சிவாஜியின் சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுகிறது. விக்ரம் பிரபு அறிவிப்பு!


சிவாஜியின் சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுகிறது. விக்ரம் பிரபு அறிவிப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமானது சாந்தி திரையங்கம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை அண்ணாசாலையில் உமாபதி என்பவரால் கட்டப்பட்டது இந்த திரையரங்கம். 1962ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கத்தை உமாபதியிடம் இருந்து சிவாஜி கணேசன் வாங்கினார்.

அன்று முதல் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் அனைத்தும் இந்த திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டது. ‘திரிசூலம்’ படம் இந்த அரங்கில் ஒரு ஆண்டு காலம் ஓடியது. சிவாஜி மறைவுக்குப் பின்னர் இத்திரையரங்கம்  புதுப்பிக்கப்பட்டு, சாந்தி, சாய்சாந்தி என இரண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினி-பிரபு நடித்த ‘சந்திரமுகி’ படம் 888 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.

தற்போதும் முன்னணி நடிகர்களின் படங்களும் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு நடித்த படங்களும் இத்திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இத்திரையரங்கம் இடிக்கப்பட இருக்கிறது. தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து இந்த அரங்கை மல்டிப்ளக்ஸாகக் கட்ட முடிவு செய்துள்ளனர் சிவாஜி குடும்பத்தினர்.

இச்செய்தியினை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தனர்.