சிபியின் கார்களுக்கு ஒரே நம்பர்; அப்படியென்ன ரகசியம்?


சிபியின் கார்களுக்கு ஒரே நம்பர்; அப்படியென்ன ரகசியம்?

‘நாணயம்’ படத்தில் நடித்த சிபிராஜ் இடையில் மூன்று வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிப் படத்தை தொடர்ந்து தற்போது ‘ஜாக்சன் துரை’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சத்யராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி நடிக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்ய விபின் சித்தார்த் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ் பேயாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிபி தற்போது ரேஞ்ச் ரோவர் கார் ஒன்ற வாங்கவிருக்கிறார். இவர் ஃபோக்ஸ்வேகன், டயோட்டா, குவாலிஸ் உள்ளிட்ட கார்களை தற்போது வைத்துள்ளார். இவை வெவ்வேறு மாடல்களாக இருந்தாலும் இந்த அனைத்து கார்களின் நம்பர் 5181 தான். இதுகுறித்த கேட்டதற்கு… இந்த நம்பரில் கார்களைத் தேர்வு செய்ய காரணம் அந்த நம்பருக்குள்ளேயே என் பெயரும் (5181 – SIBI) இடம்பெறுவது போல நம்பர் போர்டை வடிமைக்க எளிதாக இருப்பதுதான்” என்கிறார்.

அட! என்னம்மா யோசிக்கிறாருய்யா ஜாக்சன் துரை.