மகனின் ஜாதகத்துக்கு பொருத்தமான கதை கேட்கும் சிங்கமுத்து!


மகனின் ஜாதகத்துக்கு பொருத்தமான கதை கேட்கும் சிங்கமுத்து!

நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் பெரிதளவில் மக்களின் கவனத்தை ஈர்க்காமல் இருந்தவர் சிங்கமுத்து.  ஆனால் வடிவேலுவுடன் இணைந்து நடித்த பிறகுதான் யார் இவர்? என்று அனைவராலும் கேட்கப்பட்டு ரசிக்கப்பட்டவர்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடிக் காட்சிகள் செம சூப்பர் டூப்பர் ஹிட். இன்றும் காமெடி தொலைக்காட்சிகளில் இவர்களது படங்கள் ஒளிப்பரப்பட்டு மக்களும் வெகுவாக ரசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த காமெடி நடிகர் சிங்கமுத்து இவரது மகனான வாசன் கார்த்திக்கையும் கலைச்சேவை புரிய வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரும் ‘மாமதுரை’, ‘அய்யன்’ போன்ற ஓரிரு படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

முக்கியமாக காமெடி நடிகரின் மகன் என்கிற இமேஜ் விழுந்து விடக்கூடாது என்பதில் தந்தையும் மகனும் மிகக் கவனமாக இருந்தனர். நாயகனாக நடித்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் விடாமல் தன் மகனுக்காக முயற்சித்து வருகிறார் தந்தை. மகனுக்காக நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டும் சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்.

இவைமட்டுமில்லாமல், மிகத் தீவிர கடவுள் பக்தி கொண்டவரான சிங்கமுத்து ஜோதிடத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். தனது மகனின் ரீ-என்ட்ரி குறித்து ஆராய்ந்து வாசன் கார்த்திக்கின் ஜாதகத்துக்கு பொருந்தக்கூடிய இயக்குனர், கதை, தயாரிப்பாளர் என ஆராய்ந்து வருகிறாராம்.

அப்படியே மகன் ஜாதகத்துக்கு பொருத்தமான ஹீரோயினையும் தேடச் சொல்லுங்க சார்…

Related