அஞ்சலியை ஒரு தலையாய் காதலிக்கிறாராம் காமெடியன் சூரி


அஞ்சலியை ஒரு தலையாய் காதலிக்கிறாராம் காமெடியன் சூரி

’வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு காமெடி வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சூரி. வடிவேல் வாய்ப்பு இழந்ததால் சந்தானம் முன்னேறி விட்டார். தற்போது சந்தானம் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டதால், சூரி காட்டில் கோடை காலத்திலும் நல்ல மழைதான்.

கிராமத்து கதையானாலும், நகரத்து கதையானாலும் சூரிக்கு ஓர் இடம் உண்டு. இவர் நடித்து வரும் படங்களும் ஹிட்டடிப்பதால் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பார்க்கனும் போல இருக்கு, ரஜினிமுருகன், அங்காளி பங்காளி, இது நம்ம ஆளு, மாப்ள சிங்கம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் அஞ்சலியுடன் இணைந்து அப்பாடக்கரு படத்தில் நடித்து வருகிறார் சூரி.  அண்மையில் வெளியான இப்படத்தின் போஸ்டர்களை பார்த்தால் ஜெயம் ரவியுடன் த்ரிஷா காணப்படுகிறார். ஆனால் அஞ்சலியுடன் அதிகமாக சூரிதான் காணப்படுகிறார். ஒரு வேளை அஞ்சலி ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதால் அவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டதா? என்று விசாரிக்க நினைத்தோம்.

இதுகுறித்து அஞ்சலியிடம் கேட்டால் ஆகாது என்பதால், சூரியிடம் கேட்டு விட்டோம். படத்தில் சூரி அவர்களுக்கு அஞ்சலியை காதலிக்கும் கேரக்டராம். அதுவும் ஒரு தலையாய் காதலிக்கும் கேரக்டராம். (அது சரி! அஞ்சலி இவரை காதலிப்பாரா?) அதனால் இதைப் பற்றிய வதந்திகளை பரப்பவேண்டாம் என நம்மிடம் கோரிக்கை வைத்தார் ‘பரோட்டா’ சூரி.