‘குட்டிப் புலி’ சசி இயக்கத்தில் பெரிய ‘புலி’ விஜய்


‘குட்டிப் புலி’ சசி இயக்கத்தில் பெரிய ‘புலி’ விஜய்

நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா, சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ஆடுகளம் நரேன் என ஒரு பெரிய கூட்டமே நடித்து வருகிறது.

இதனையடுத்து ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லி படத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய் 59 என்று தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பாரதிராஜா மற்றும் ராதிகா சரத்குமார் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். தற்போது இந்த இரு படங்களை முடித்து விட்டு அடுத்த படத்திற்கும் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

’சுப்ரமணியபுரம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் சசிக்குமார். படமும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதன் பிறகு ஈசன் என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். பின்னர் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்ததால் முழு நேராக நடிகராக மாறிவிட்டார்.

இந்நிலையில்,  விஜய் 60 என்ற இப்படத்தை இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் இயக்கவிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகர் விஜய்க்கு சசிக்குமார் ஒரு கதை கூறியதாகவும் விஜய்க்கும் கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.

சசிக்குமார் தற்போது பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.