விஜய் வசந்துக்காக ‘அச்சமின்றி’ டீசரை வெளியிடும் விஷால்..!


விஜய் வசந்துக்காக ‘அச்சமின்றி’ டீசரை வெளியிடும் விஷால்..!

என்னமோ நடக்குது என்ற வெற்றிப் படத்திற்காக இணைந்த நாயகன் விஜய்வசந்த், தயாரிப்பாளர் வினோத் குமார், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் “அச்சமின்றி”.

இப்படத்தின் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்க, சமுத்திரகனி, ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ உள்ளிட்டோர் நடிக்த்துள்ளனர். கௌரவ தோற்றத்தில் ரோகினி நடித்திருக்கிறார்.

A.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் எடிட்டிங்கை மேற்கொள்கிறார்.

படம் குறித்து இயக்குனர் பி. ராஜபாண்டி கூறியதாவது…

“குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை ஆகியவற்றை இதில் சொல்லியிருக்கிறோம்.

இப்படத்தின் டீசரை பார்த்த விஷால் மிகவும் பாராட்டினார். எனவே அவரே நாளை மே 13ஆம் அச்சமின்றி டீசரை வெளியிடுகிறார்” என்றார்.