தாங்குமா தமிழ் சினிமா… எம்ஜிஆருடன் மோதும் விஜய்-சூர்யா..!


தாங்குமா தமிழ் சினிமா… எம்ஜிஆருடன் மோதும் விஜய்-சூர்யா..!

ஒருவழியாக பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தெறி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 24 படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இவ்விரண்டு படங்களும் ஏப்ரல் 14ஆதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதேநாளில் சிம்புவின் இது நம்ம ஆளு, ஜி.வி. பிரகாஷின் பென்சில் படமும் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

இதில் புதிய வரவாக விஷால் நடித்து, நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த மதகஜராஜா – Madha Gaja Raja (எம்ஜிஆர்) படமும் வெளிவரத் தயாராகி வருகிறதாம்.

சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுடன் அஞ்சலி, வரலட்சுமி இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நட்சத்திரங்களின் இத்தனை படங்கள் ஒரே நாளில் வெளியானால் தாங்குமா தமிழ் சினிமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.