கண்ணகி வேடத்தில் அஞ்சலி… காத்திருக்கும் ரசிகர்கள்..!


கண்ணகி வேடத்தில் அஞ்சலி… காத்திருக்கும் ரசிகர்கள்..!

அங்காடி தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் மாறுபட்ட கேரக்டர்களை பெற்றவர் அஞ்சலி. இதில் தனது நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார்.

அதன்பிறகு பல படங்களிலும் நடித்தாலும் அவருக்கு பெயரைத் தேடித் தரும் அளவுக்கு கேரக்டர்கள் அமையவில்லை.

ஆனால் தற்போது கண்ணகி என்ற பெயரில் ஒரு அம்சமான கேரக்டர் அவருக்கு அமைந்துவிட்டதாம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இறைவி படத்தில்தான் இந்த கேரக்டர்.

இதில் எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா என மூன்று நாயகர்கள் இருந்தாலும், கண்ணகி கேரக்டர் அஞ்சலிக்கு திருப்புமுனையை உண்டாக்கும் என்கிறார்கள் கோலிவுட் வல்லுனர்கள்.