‘பெற்றோரின் முடிவை ‘ஆகம்’ படத்தால் உணர்ந்தேன்…’ தீக்ஷிதா பேட்டி..!


‘பெற்றோரின் முடிவை ‘ஆகம்’ படத்தால் உணர்ந்தேன்…’ தீக்ஷிதா பேட்டி..!

ஜ்யோ ஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பாக கோட்டீஸ்வர ராஜு மற்றும் இவரது மனைவி ஹேமா இணைந்து தயாரித்திருக்கும் படம் ஆகம் (ஆகம் என்றால் வந்தடைதல் என்று பொருள்).

இதில் இர்ஃபான், தீக்ஷிதா, ஜெயப்பிரகாஷ், ஒய் ஜி மகேந்திரன், ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இப்படத்தின் நாயகி தீக்ஷிதா இப்படம் குறித்து கூறியதாவது…

“நமது நாட்டில் பிறந்து நமது அரசாங்கம் தரும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து, பிறகு வெளிநாட்டில் வேலைக்கு சென்று, அங்கேயே செட்டிலாகும் சிலரின் கதைதான் இப்படம்.

தன்னுடைய புத்திசாலிதனத்தை தன் நாட்டுக்கு பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கு விற்கும் ஒரு சிலரை பற்றிதான் இப்படம் சொல்ல வருகிறது.

நான் என் நிஜவாழ்வில் ஒரு இன்ஜினியரிங் மாணவி. எனக்கும் என் ப்ரெண்ட்ஸை போல் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

ஆனால் வெளிநாட்டுக்கு என் பெற்றோர்கள் என்னை அனுப்ப மறுத்து விட்டனர்.

அப்போது அவர்களின் முடிவு தவறு என நினைத்தேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் அது சரியென எனக்கு தோன்றியது. இந்தப் படம் பார்த்த பிறகு நீங்களும் அதை உணர்வீர்கள்” என்றார்.

Related