மலேசியாவில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய ரஜினி மகள் ?


மலேசியாவில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய ரஜினி மகள் ?

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்து வருகிறார். இவரும் ரஜினியும் சென்னையில் இருந்து விமானம் மூலம் வெளிநாடு செல்வது போன்ற காட்சிகள் சென்னை விமானநிலையத்தில் படமாக்கப்பட்டது.

சமீபத்தில் கோலாலம்பூர் இரட்டை கோபுரம் அருகேயுள்ள சாலையில் இதன் தொடர்புக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தந்தை மகள் நடிக்கும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார் ரஞ்சித். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த தன்ஷிகாவுக்கு இடது காலில் அடிபட்டது. பின்னர் சிகிச்சை பெற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து கேரி ஐலேண்ட் என்ற பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போதும் தன்ஷிகா கால் தடுக்கி தவறி விழவே தலை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தன்ஷிகா.