நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா காலமானார்..!


நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா காலமானார்..!

நடிகை ஊர்வசியின் சகோதரியும் பிரபல நடிகையுமான கல்பனா உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் இவர்.

சமீபத்தில் படப்பிடிப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்த போது, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள இயக்குனர் அனில்குமாரை திருமணம் செய்து கொண்ட கல்பனா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இவருக்கு ஸ்ரீமயி என்ற ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related