‘வெத்து வேட்டு’ படத்தலைப்பைப் பார்த்து நடிக்க மறுத்த மாளவிகா!


‘வெத்து வேட்டு’ படத்தலைப்பைப் பார்த்து நடிக்க மறுத்த மாளவிகா!

ஹரீஷ் கதாநாயகனாக நடிக்க, எஸ். மணிபாரதி இயக்கும் படம் வெத்து வேட்டு. வேகமாக வளர்ந்து வரும் இந்த வெத்து வேட்டு குறித்து இயக்குனர் கூறியதாவது…

ஒருவன் சொல்கிற பொய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாள் அதே பொய் அவனை தாக்கும். அப்போது அவன் அதனை எதிர்கொள்ள நேரிடும் என்கிற கருத்தை இந்த படத்தில் கதையாக்கி இருக்கிறோம்.

‘வெத்து வேட்டு’ படத்திற்காக மாளவிகா மேனனிடம் பேசி கதை சொல்லி ஓ.கே வாங்கி விட்டோம். நல்ல கதை என்று சந்தோஷமாக சொன்ன மாளவிகா மேனன் ஷூட்டிங் நேரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

விழா படத்தில் நடித்திருந்தேன் என்னை ‘விழா’ மாளவிகா மேனன் என்று அழைத்தார்கள். தற்போது வெத்து வேட்டு என்ற இப்படத்தில் நடித்தால் ‘வெத்து வேட்டு’ மாளவிகா மேனன்னு சொல்லுவாங்க அதனால நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார்.

அதன்பின்னர் எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. படத்தின் ஹீரோ மற்றும் படக்குழுவினர் பேசி, பெரும்பாலும் ஆம்பளைங்களைத் தான் வெத்து வேட்டுன்னு சொல்வாங்க, பொண்ணுங்கள சொல்ல மாட்டாங்கன்னு சமாதானம் சொல்லி நடிக்க வைத்தோம். அதன் பின்னர், டைட்டிலை மட்டுமே யோசிச்சி நல்ல படத்தை இழந்திருப்பேன் என்று மாளவிகாவே சொன்னார்.

மேலும் இப்படத்தில் இளவரசு, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன் மனோகர், போண்டாமணி, சின்ன சில்க் உமா ஆகியோர் நடிக்கின்றனர்.