‘அம்மாவின் நலத்திட்டங்களே வாக்குகளாக மாறியது…’ நமீதா நன்றி…!


‘அம்மாவின் நலத்திட்டங்களே வாக்குகளாக மாறியது…’ நமீதா நன்றி…!

நடந்துமுடிந்து சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமோக வெற்றிப் பெற்றுள்ளது.

இதனையடுத்து, மீண்டும் ஜெயலலிதாவே ஆட்சி அரியணையில் ஏறுகிறார். இதுகுறித்து சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நமீதா கூறியதாவது….

“இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.

இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும் வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள்.

 

namitha still new

 

இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.

 

nami

 

இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில் அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!

இவ்வாறு நமீதா நன்றி கூறினார்.