லேடி சூப்பர் ஸ்டார் நயனும்… நானும்… ‘நண்பேன்டா’ உதயநிதி


லேடி சூப்பர் ஸ்டார் நயனும்… நானும்… ‘நண்பேன்டா’ உதயநிதி

இந்த வாரம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது ‘நண்பேன்டா’ திரைப்படம். இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து இதிலும் உதயநிதி, நயன்தாரா, சந்தானம் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்களில் இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக பணிபுரிந்த ஏ ஜெகதீஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, வழக்கம்போல உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இந்தப் படத்துக்கும்  இசையமைத்துள்ளார்.

‘நண்பேன்டா’ படம் குறித்தும், தொடர்ந்து நயன்தாரா, சந்தானம் இணைவது குறித்தும் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதியிடம் கேட்டபோது…

“நான் இப்போ 3 படங்கள்ல நடிச்சிட்டேன். இயல்பா நடிக்க ஆரம்பிச்சு ஒரு இடத்திற்கு வந்திட்ட மாதிரி இருக்கு. முதல் படத்தில் நான் நிறைய திருத்திக்கணும்னு தன்னால உணர்ந்தேன்.  இப்ப இந்தப்படத்துல உதயநிதி நல்லா பண்ணியிருக்காருன்னு சொல்ற அளவில் மாறியிருக்கேன்.

நயன்தாராவுக்கு டைரக்டர் ஜெகதீஷை ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் பணி புரிந்த காலத்தில் இருந்தே தெரியும். கதையைக் கேட்டதுமே ஓகே சொல்லியிருக்காங்க. நான் அவங்களை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ தான் சொல்லுவேன். காரணம் ரஜினி சார் நேரத்தை எப்படி கடைபிடிப்பாரோ அது போல காலை ஏழு மணிக்கு ஷூட்டிங்னு சொல்லிட்டா அந்த சமயத்திற்கு முன்பே கேமரா முன்னாடி வந்து நிப்பாங்க. அப்படி ஒரு சின்சியரான நடிகை. இந்த டெடிகேஷன்தான் அவங்களை முதலிடத்தில் வச்சிருக்கு”என்றார்.

தொடர்ந்து சந்தானம் குறித்து கேட்டதற்கு… நிஜமாவே நாங்க ஃப்ரண்ட்ஸ். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுப்போம். அக்கறையா இருப்போம். ஆனால் இந்த கேள்வி அடிக்கடி வருவதால்,  ‘அடுத்த படங்கள்ல நாங்க சேர்ந்து நடிக்க வேண்டாம். அப்புறமா சேர்ந்துக் நடிக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கோம். எமி ஜாக்சனும் நானும் சேர்ந்து நடிக்கும் ‘கெத்து’ படத்தில் கருணாகரன்தான் காமெடி பண்றார்” என்றார்.