30 வருஷமா நடிகை ரதியை கொடுமைப்படுத்திய கணவர்!


30 வருஷமா நடிகை ரதியை கொடுமைப்படுத்திய கணவர்!

பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ படம் மூலம் நடிகையானவர் ரதி அக்னிஹோத்ரி. ரஜினியுடன் ‘முரட்டுக்காளை’, ‘கழுகு’ மற்றும் நடிகர் கமலுடன் ‘உல்லாச பறவைகள்’  போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்னர் இந்தி திரையுலகுக்கு சென்றவர் இங்கே திரும்ப மனமில்லாமல் தொழிலதிபர் அனில் விர்வானியை காதலித்து திருமணம் செய்து செட்டிலானார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு தன் திருமண வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது…

“உண்மையான காதல் மீது நம்பிக்கை கொண்ட நான் என் பெற்றோரின் ஆசைகளையெல்லாம் மீறி அனிலை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அவர் என்னை கொடுமைப்படுத்திய விதங்களை வெளியில் சொல்ல முடியாது. அவர் என்றாவது ஒருநாள் திருந்த வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களும் இல்லை வேண்டாத நாட்களும் இல்லை.

மகனுக்காகவும், நமது கலாச்சாரத்திற்காகவும் பொறுமையுடன் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். திருந்தி வந்து நல்லமுறையில் கவனித்து கொள்வார் என்ற நம்பிக்கையிலேயே காலம் கடத்தினேன். ஆனால், இனியும் அந்தக் கொடுமைகளை தாங்க என்னிடம் சக்தியில்லை என்பதால் அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறேன். சரியான முடிவை எடுத்கக நான் நீண்ட காலம் எடுத்துவிட்டேன். இனியும் சேர்ந்து வாழமாட்டேன்.” என்றார்.

இவருக்கு 28 வயதில் தனுஜ் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.