விஜய்-அஜித், விக்ரம்-சூர்யா, சிம்பு-தனுஷ் பற்றி ‘புகழ்’ நாயகி சுரபி.!


விஜய்-அஜித், விக்ரம்-சூர்யா, சிம்பு-தனுஷ் பற்றி ‘புகழ்’ நாயகி சுரபி.!

விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை தன் அழகிய சிரிப்பால் கவர்ந்தவர் சுரபி.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி தன் திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இவரது நடிப்பில் வளர்ந்துள்ள ‘புகழ்’ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. ஜெய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அரசியல்வாதிகளுக்கும் ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த புகழ் நாயகி, தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது…

  • அஜித்… சூப்பர் ஸ்டாருக்கு நிகரானவர்
  •  விஜய்… திறமையான பாடகர், நடிகர், டான்ஸர்
  •  சூர்யா… காந்தம் போல் கவர்ந்திழுப்பவர்
  • விக்ரம்… அற்புதமான பல திறமைகள் உள்ள நடிகர்
  • சிம்பு… இனிமையான மனிதர்
  • தனுஷ்… அருமையான நடிகர்

இவ்வாறு தெரிவித்துள்ளார் சுரபி.