தமன்னாவையும் அந்த இக்கட்டில் தள்ளிய த்ரிஷா, நயன்தாரா?


தமன்னாவையும் அந்த இக்கட்டில் தள்ளிய த்ரிஷா, நயன்தாரா?

ப்ளாக் அண்ட் ஒயிட் கால படங்களில் படத்தில் நடித்த கலைஞர்கள் தங்கள் சொந்த குரலில் ஆடி பாடி, பேசி நடித்தனர்.

ஆனால் பின் எல்லாமே இரவல் குரல்களில் நடக்க ஆரம்பித்தது.

ஒரு சில நடிகைகள் மொழி தெரிந்தாலும் டப்பிங் பேசாமல் இருந்து வந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கே வந்து சேரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகை த்ரிஷா, தான் நடிக்கும் படங்களில் சொந்த குரலில் பேசி வருகிறார்.

சமந்தாவும் 10 எண்றதுக்குள்ள படத்தில் இரண்டு கேரக்டர்களுக்கும் டப்பிங் பேசியிருந்தார்.

முதன்முறையாக நயன்தாராவும் நானும் ரௌடிதான் படத்தில் சொந்த குரலில் பேசினார். தற்போது நடித்து வரும் மலையாளப் படத்திலும் அப்படியே தொடர்கிறார்.

இந்நிலையில் தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் தமன்னாவும் இந்து முடிவுக்கு வந்து விட்டாராம்.

தன் கேரக்டருக்கு தானே டப்பிங் பேசவிருக்கிறார். மேலும் இப்படத்தில் சேலை கட்டிய புதுமைப்பெண்ணாக வருகிறார் தமன்னா.