‘இது நம்ம ஆளு’ சிம்புவுடன் டூயட் பாடும் 3 அழகிகள்..!


‘இது நம்ம ஆளு’ சிம்புவுடன் டூயட் பாடும் 3 அழகிகள்..!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து பரபரப்பாக பேசப்பட்ட படம் ‘இது நம்ம ஆளு’. இதற்கு காரணம் தன் நிஜ வாழ்க்கை முன்னாள் காதலி நயன்தாராவுடன் இதில் டூயட் பாடியிருந்தார் சிம்பு.

மேலும் இப்படத்தில் சிம்புவுடன் ஆண்ட்ரியா சேர்ந்து கொண்டதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் படம்தான் வெளியாகாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது.

குறரளசன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவிருப்பதால், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மாமன் வெயிட்டிங்’ என்ற பாடலை சென்னையில் இன்று படமாக்க இருக்கிறார்கள். இப்பாடலுக்கு ராபர்ட் நடனம் அமைக்கிறார்.

ஏற்கெனவே இப்படத்தில் இரண்டு நாயகிகள் டூயட் பாடி கொண்டிருந்தாலும் இப்பாடலில் சிம்பு நடனமாட இருப்பவர் ஆந்திரா அழகி ஆதா ஷர்மா.

அண்மையில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த ‘க்ஷனம் (Kshanam)’ படத்தில் நடித்தவர்தான் இந்த ஆதா ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது.