நிக்கி கல்ராணியுடன் இணைந்த சிவகார்த்திகேயனின் ராசி இயக்குனர்.!


நிக்கி கல்ராணியுடன் இணைந்த சிவகார்த்திகேயனின் ராசி இயக்குனர்.!

சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த முதல் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

பொன்ராம் இப்படத்தை இயக்கியிருந்தார். எனவே மீண்டும் ரஜினிமுருகன் படத்தில் இவர்கள் இணைந்தனர்.

விரைவில் மீண்டும் இந்த ராசி இயக்குனருடன் இணையவிருக்கிறார் சிவா.

இந்நிலையில், ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தின் முதல் காட்சியை துவக்கி வைத்துள்ளார் பொன்ராம்.

இப்படத்தில் ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், டேனியல், அருண்ராஜா காமராஜ், சங்கிலி முருகன், மைம் கோபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பி.பி. சங்கர் ஒளிப்பதிவு செய்ய, திபு நின்ன் தாமஸ் இசையமைக்கிறார்.

ஆக்சஸ் பிலிம் பாக்டரி சார்பாக டில்லி பாபு இப்படத்தை தயாரிக்க, ARK சரவண் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் முதல் காட்சி ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று படமாக்கப்பட்டது.