ரஜினியுடன் மோத புதிய வில்லனை சேர்க்கும் ஷங்கர்..!


ரஜினியுடன் மோத புதிய வில்லனை சேர்க்கும் ஷங்கர்..!

லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்காக அடில் உசேன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘யட்சன்’ படத்தின் வில்லனாக நடித்தவர் அடில் உசேன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்த ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர்.