“தாரைதப்பட்டை” ரிலீசுக்கு முன்பே இன்னொரு படமும் ரெடி!


“தாரைதப்பட்டை” ரிலீசுக்கு முன்பே இன்னொரு படமும் ரெடி!

இளையராஜா இசையில் பாலா உருவாகியுள்ள படம் “தாரைதப்பட்டை”. இப்படத்தில் சசிகுமார், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை முடித்த கையோடு மறுநாளே தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் சசிகுமார்.

வசந்தமணி இயக்கும் “வெற்றிவேல்” என்ற படம் படுவேகமாக வளர்ந்துவருகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன் துவங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது தாராபுரம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சசிகுமாரின் ஜோடியாக மியா ஜார்ஜ் உடன் சேர்த்து மொத்தம் மூன்று நாயகிகள். இரண்டு பேர் புதுவரவு.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பை இம்மாத இறுதிக்குள் முடிக்க இருக்கிறார்கள்.

பாலா படத்தை முடித்துவிட்டு அப்படம் வெளியாவதற்குள் அதேவேகத்தில் தனது அடுத்த படத்தையும் தயார் நிலையில் வைத்திருப்பதே சசி டீமின் ப்ளானாம்.

காரணம் படம் ரிலீசாகி வருசமாச்சே! விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டாமா??

ம். தெளிவுதான்!