எந்திரனுக்கு பிறகு மிருதன் மட்டும்தான்… குஷியில் ஜெயம்ரவி..!


எந்திரனுக்கு பிறகு மிருதன் மட்டும்தான்… குஷியில் ஜெயம்ரவி..!

இந்திய சினிமாவின் முதல் ஷோம்பி படம் என்ற அடையாளத்துடன் வெளியான படம் ‘மிருதன்’.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய இப்படத்தில ஜெயம் ரவி, லக்ஷ்மிமேனன், காளி வெங்கட், பேபி அனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்தை போலவே இமான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், இப்படம் கனடாவில் நடைபெறவிருக்கும் ‘ஃபேன்டஸியா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலி’ல் திரையிட தேர்வாகியுள்ளதாம்.

இதனை படத்தின் நாயகன் ஜெயரம் ரவியே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை தமிழில் ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே இந்த திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருந்தது. தற்போது மிருதன் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.