விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் வழியில் ஹிப் ஹாப் ஆதி..!


விஜய் ஆண்டனி,  ஜி.வி.பிரகாஷ் வழியில் ஹிப் ஹாப் ஆதி..!

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் ஹீரோ அவதாரம் எடுத்து தொடர் வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

இதனால் இவர்களது படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ரஜினி, கமல் படங்களை தயாரிக்கும் பிரபல லைகா நிறுவனம் இவர்களின் எமன், எனக்கு இன்னொரு பேரு இருக்கு படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இவர்களின் வரிசையில், இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதியும் விரைவில் ஹீரோ வேஷம் கட்டப்போகிறாராம்.

இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கும் படத்தில், ஆதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.