‘ரஜினிக்கு பிறகு விசில் சத்தம் எனக்குதான்’- பவர் ஸ்டார்


‘ரஜினிக்கு பிறகு விசில் சத்தம் எனக்குதான்’- பவர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் என்பதற்கு பதிலாக ரஜினி என்று சொன்னால் கூட நமக்கெல்லாம் தெரியும். ஆனால் சீனிவாசன் என்ற பெயரை சொன்னால் பலருக்கு தெரியாது. எந்த சீனிவாசன் என்று முதலில் கேட்பீர்கள். ஆனால் பவர்ஸ்டார் என்று சொன்னால் நிச்சயமாக நீங்கள் கப்பென்று பிடித்து கொள்வீர்கள். அப்படி ஒரு பெயரை உருவாக்கி வைத்திருக்கிறார் இவர்.

குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர்கள் பட்டியலில் இவரது பெயரும் கண்டிப்பாக இடம்பெறும். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட படத்திற்கு தேவையில்லாமல் இவருக்காக சில காட்சிகளை ‘ஐ’ படத்தில் உருவாக்கியிருந்தார்.

இந்நிலையில், ஒரு பிரபல டிவி நடத்திய விருது விழா குறித்து இவர் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.  அவர் கூறியதாவது… “யார் விருது வாங்குறாங்கன்னு முக்கியம் இல்ல. யார் பேர சொன்ன விசில் சத்தம் காதை பிளக்குதுன்னு பாருங்க… ரஜினி, அஜித்துக்கு அப்புறம் என்னோட பேருக்குதான் அந்த விசில் சத்தம் கிடைக்கும் என்றிருக்கிறார்.

இருந்தாலும் இவருக்கு இவ்ளோ ஆகாதுன்னே…