இன்று மாலை 6 மணிக்காக காத்திருக்கும் சிம்பு ரசிகர்கள்..!


இன்று மாலை 6 மணிக்காக காத்திருக்கும் சிம்பு ரசிகர்கள்..!

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் அச்சம் என்பது மடமையடா படத்திற்காக இணைந்த போதே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

இதனை உறுதி செய்யும் வகையில் இப்படத்தில் இடம் பெற்ற, தள்ளிப் போகாதே சிங்கிள் ட்ராக் இணையத்தில் சாதனையை படைத்தது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறார்களாம். ஷோக்காலி என இப்பாடல் தொடங்குகிறது.

எனவே, இப்பாடலையும் டிரெண்டாக்க சிம்பு ரசிகர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

கௌதம் மேனன் இயக்கிவரும் இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.