“ஓய்வுக்குப் பிறகு அஜித் கலந்துகொள்ளும் படம் எதுவென முடிவானது??”


“ஓய்வுக்குப் பிறகு அஜித் கலந்துகொள்ளும் படம் எதுவென முடிவானது??”

வேதாளம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் எனத் தெரிகிறது. தற்போது நாயகி வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் நயன்தாரா, எமி ஜாக்சன், தமன்னா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

இப்படத்தைத் தயாரிப்பது தொடர்பாக சத்யஜோதி தியாகராஜனும், சிவாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கக் கூடும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் தனது ஓய்வை முடித்துவிட்டு மே மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.

பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி நடித்துள்ள படத்தை தற்போது தயாரித்து வருகின்றனர்.