தனுஷின் ‘விஐபி 2’ படத்திற்கும் ரஜினி படத்தலைப்பு!


தனுஷின் ‘விஐபி 2’ படத்திற்கும் ரஜினி படத்தலைப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்கள் ரீமேக் செய்யப்பட்டன. அவற்றைப் போல ரஜினி நடித்த ‘பொல்லாதவன்’, ‘படிக்காதவன்’, ‘தீ’, ‘நான் மகான் அல்ல’, ‘ராஜாதி ராஜா’, ‘பாயும் புலி’ உள்ளிட்ட படத்லைப்புகளை புதிய படத்திற்கும் வைக்கப்பட்டன. இது தற்போதைய தமிழ் சினிமாவின் பேஷனாகி விட்டது.

சமீபத்தில் பாபி சிம்ஹாவின் புதியபடத்திற்கு ‘வீரா’ எனவும் ஜீவா படத்திற்கு ‘போக்கிரி ராஜா’ எனவும் தலைப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பெரும்பாலும் ரஜினி டைட்டிலை பயன்படுத்தும் தனுஷ் இம்முறையும் அதனை ரிபீட் செய்துள்ளார்.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு ‘தங்க மகன்’ என பெயரிட்டுள்ளனர். இது ரஜினி நடித்து 1983ம் ஆண்டு வெளியான படத்தின் பெயரே.

தனுஷ் அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.