‘இது என்ன மாயம்’ முடிந்ததும் விஜய்யுடன் இணையும் ஆர்யா!


‘இது என்ன மாயம்’ முடிந்ததும் விஜய்யுடன் இணையும் ஆர்யா!

ஆர்யா-எமி ஜாக்சன் இணைந்த ‘மதராசபட்டினம்’ படத்தை இயக்கியவர் விஜய். தற்போது இவர்கள் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையப் போகிறது. இதில் எமியும் இருப்பாரா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா மீண்டும் ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.  ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் மிக வேகமாக படமாக்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதே வேளையில், பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் ‘சைஸ் ஜீரோ’ என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார் ஆர்யா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். (அதானே அனுஷ்காவ மறக்கமுடியுமா?) இந்தப் படங்கள் தவிர ஷாம், விஜய் சேதுபதியுடன் ஆர்யா  நடித்துள்ள ‘புறம்போக்கு’ படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இயக்குனர் விஜய்யும் தற்போது ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விக்ரம் பிரபுவை வைத்து ‘இது என்ன மாயம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் அவரவர் படங்களை முடித்துவிட்டு அடுத்த வெற்றியை கொடுக்க வெகு விரைவில் இணைவார்கள் எனத் தெரிகிறது.