அஜித் படத்தயாரிப்பாளருடன் இணையும் விஜய்-இலியானா!


அஜித் படத்தயாரிப்பாளருடன் இணையும் விஜய்-இலியானா!

விஜய் நடிப்பில் 59வது படமாக வளர்ந்து வரும் படத்தை ‘ராஜா ராணி’ புகழ் அட்லி இயக்கி வருகிறார். இதுவரை பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘விஜய் 60’, ‘விஜய் 61’ ஆகிய படங்கள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் ‘வீரம்’ படத்தை தயாரித்த விஜயவாஹினி ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்காக ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் உறுதியாகியுள்ளது.

இப்படத்தை ‘தனி ஒருவன்’ மோகன் ராஜா இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இதில் ‘நண்பன்’ புகழ் இலியானா மீண்டும் விஜய்யுடன் இணையவிருக்கிறாராம். இப்படம் விஜய்யின் 60வது படமா? அல்லது 61வது படமா? என்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும் என்கிறார்கள் கோலிவுட் வல்லுனர்கள்.