கதை சூப்பர், ஆனால் அஜித் வேண்டாம்; மறுக்கும் தயாரிப்பாளர்!


கதை சூப்பர், ஆனால் அஜித் வேண்டாம்; மறுக்கும் தயாரிப்பாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினி, மீனா நடித்து மாபெரும் ஹிட்டடித்த படம் ‘முத்து’. இது மலையாளப் படமான ‘தேன்மாவின் கொம்பத்து’ படத்தின் ரீமேக் ஆகும். ப்ரியதர்ஷன் இயக்கிய இப்படத்தில்தான் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் கே.வி. ஆனந்த். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்காக தேசிய விருதைப் பெற்றார்.

இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார். இதன்பின்னர் ஸ்ரீகாந்த், கோபிகா ‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குனராக உயர்ந்தார் கே.வி. ஆனந்த். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து சூர்யா நடித்த ‘அயன்’, ஜீவா நடித்த ‘கோ’ படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார்.

இதன்பின்னர் கல்பாத்தி அகோரம் நிறுவனத்திற்காக சூர்யா நடித்த ‘மாற்றான்’, தனுஷ் நடித்த ‘அனேகன்’ ஆகிய படங்களை இயக்கினார். இவை இரண்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, கல்பாத்தி அகோரம் நிறுவனத்திற்கு ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க விரும்பினார். எனவே அருமையான கதையுடன் அந்த நிறுவனத்தை அணுகியுள்ளார் இயக்குனர்.

தான் சொன்ன ஒன்லைனைக் கேட்ட அஜித் இக்கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்ற தகவலை நிறுவனத்தினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கல்பாத்தி அகோரமோ படத்தின் கதை நன்றாக உள்ளது. ஆனால் அஜித்தின் சம்பளம் அதிகம். மேலும் அஜித் பட புரமோஷனுக்கு ஒத்துழைக்க மாட்டார். எனவே வேறு ஹீரோ கால்ஷீட்டுடன் வாருங்கள் என்றார்களாம்.