ரஜினிகாந்த் பிறந்தநாளில் ஐஸ்வர்யா தனுஷின் ட்ரீட்..!


ரஜினிகாந்த் பிறந்தநாளில் ஐஸ்வர்யா தனுஷின் ட்ரீட்..!

‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை சினிமா வீரன் என்ற ஆவணப் படத்தை இயக்கவுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

இதனிடையில் ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ் (Standing on an Apple Box) எனப் பெயரிடப்பட்டுள்ள ஒரு புத்தகத்தை எழுதியுள்ளாராம் இவர்.

இதில் தன் வாழ்வில் தான் சந்தித்த மனிதர்கள் மற்றும் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரை குறித்து எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் தன் தந்தை ரஜினியிடம் இருந்து கற்ற அனுபவங்களையும் குறிப்பிட்டுள்ளாராம்.

இப்புத்தகத்தின் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தின் இந்தியப் பிரிவு பெற்றுள்ளது. இப்புத்தகத்தை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடவிருக்கிறாராம் ஐஸ்வர்யா.