மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யாராயுடன் ஸ்ருதி!


மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யாராயுடன் ஸ்ருதி!

‘ராவணன்’, ‘கடல்’ போன்ற படங்களினால் கவலையடைந்த மணிரத்னம், ‘ஓ காதல் கண்மணி’யின் தாறுமாறான வெற்றியினால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

இதனால் தன் அடுத்த படத்தை உடனே இயக்க தயாராகிவிட்டார் மணிரத்னம். இம்முறை இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஐஸ்வர்யா ராயை இயக்க போகிறாராம். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறதாம்.

எனவே, இந்த மூன்று திரையுலகை சார்ந்த பிரபலங்களை இப்படத்தில் நடிக்க வைக்கவிருக்கிறாராம். எனவே, நாகார்ஜூனா, மகேஷ் பாபு மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைகள் இறுதி வடிவம் பெற்றபின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

‘இருவர்’, ‘ராவணன்’ படங்களை தொடர்ந்து இப்படம் மூலம் மணிரத்னத்துடன் மூன்றாவது முறையாக இணைகிறார் ஐஸ்வர்யா ராய்.