’ஐஸ், ஜோ, மஞ்சு : 3 பேரும் ரொம்ப லக்கி’ – ரெஜினா புகழாரம்!


’ஐஸ், ஜோ, மஞ்சு : 3 பேரும் ரொம்ப லக்கி’ – ரெஜினா புகழாரம்!

‘கண்டநாள் முதல்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ போன்ற படங்களில் நடித்தவர் ரெஜினா. ‘ராஜதந்திரம்’ வெற்றியை தொடர்ந்து ஏதாவது தமிழ் படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் இதுவரை எதிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். தற்போது ‘சுப்ரமணியம் ஃபார் சேல்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். அப்பேட்டியில் தான் நடிக்கும் படங்களில் தன் கேரக்டர் குறித்து கூறியிருந்தார். அதில்…

“நான் நடிக்கும் படங்களில் என் கேரக்டர் குறித்து மட்டுமே பார்க்கிறேன். எனக்கு பேர் வாங்கித் தருமா? என்னால் பளிச்சிட முடியுமா? என்பதை பார்க்கிறேன். இரண்டாவது ஹீரோயினா, மூன்றாவது ஹீரோயினா என்பதை பார்ப்பதில்லை. மற்றபடி பெரிய இயக்குநர்கள் முன்னணி நாயகர்கள் படங்கள் எல்லாம் அதுவாக அமைந்தால்தான் உண்டு என்றார்.

மேலும் திருமணமான நடிகைகளின் ரீஎன்ட்ரி குறித்து கேட்டதற்கு…

“பொதுவாக ஹீரோயின்களுக்கு சினிமாவில் நடிப்பது அதிகபட்சம் ஆறு ஆண்டுகள்தான் இருந்தது. ஒரு சிலருக்கு வேறுபடலாம். ஆனால் அந்த நிலை தற்போது மாறி வருகிறது. ஐஸ்வர்யா ராய், ஜோதிகா, மஞ்சுவாரியர் இவர்களின்  ரீஎன்ட்ரி எங்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. திருமணம் ஆனாலும் தனக்கு வாய்ப்புகளை வரவைத்திருப்பது திரையுலகில் இவர்களுக்கான இடம் தற்போதும் உள்ளது என்பதை காட்டுகிறது. குடும்பத்தின் முழுமையான ஆதரவு இருப்பதால் இவர்களால் மீண்டும் நடிக்க முடிகிறது. அந்த விதத்தில் இவங்க மூணு பேருமே ரொம்ப லக்கிதான்” என்றார்.