‘போக்கிரி ராஜா’வை அடுத்து ஐஸ்வர்யாவுடன் சிபிராஜ்..!


‘போக்கிரி ராஜா’வை அடுத்து ஐஸ்வர்யாவுடன் சிபிராஜ்..!

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 25வது படம் ‘போக்கிரி ராஜா’. இப்படத்தில் ஜீவாவுடன் சிபிராஜ், ஹன்சிகா, மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தை தொடர்ந்து ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.

‘பி.டி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல்’ சார்பாக பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 4ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

சென்சாரில் இப்படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் கொடுத்துள்ளதை தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என ‘போக்கிரி ராஜ’ பட குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து சிபிராஜ் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அறிமுக இயக்குனர் ஆர்.மணிகண்டன் இயக்கவிருக்கும் இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இசை சமீர் சந்தோஷ்.