தமிழ் நடிகைக்கு வாய்ப்பளித்தமைக்கு ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஐஸ்வர்யா..!


தமிழ் நடிகைக்கு வாய்ப்பளித்தமைக்கு ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஐஸ்வர்யா..!

இயக்குனர் சுந்தர் சி, தன் அவ்னி மூவீஸ் சார்பாக தயாரித்துள்ள படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்” .

அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்கியுள்ள இதில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி. கணேஷ், கருணாகரன், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. மக்கள் தொடர்பாளர் ரியாஸ் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

வைபவ் பேசியதாவது..

“இதில் பிக்பாக்கெட் திருடனாக நடித்திருக்கிறேன். ‘ஐய்யோ கவிதா’ என்கிற வசனம் சரியாக வரவில்லை. 30 முறைக்கு மேல் டேக் எடுத்துவிட்டேன். அதுவரை பாஸ்கர் என்னை விடவில்லை.

அன்று பார்த்து சுந்தர் சி சார் வந்துவிட்டார். அவர் ‘ஐயோ’ என ஓடியேவிட்டார்” என்று கலகலப்பாக பேசினார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் பாஸ்கர் சாருக்கு நன்றி. தமிழ் பேச தெரிந்த நடிகைதான் வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்ததார். தமிழ் தெரிந்த நடிகை என்பதால் I am so happy. I am very proud to be தமிழ் பேசுற நடிகை.

எனக்கு இதுவரை நடனம் ஆடும்படியான பாடல்களும் படங்களும் கிடைக்கவில்லை. ஆனால் இப்படத்தில் ‘சில்லாக்கி டும்மா’ பாடலில் செத்த பிணத்தின் மீது ஏறி டான்ஸ் ஆடியிருக்கிறேன். இந்த சாவு குத்து பக்கா லோக்கலாக இருக்கும்” என்றார்.