தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான்..!


தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான்..!

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, 3 மற்றும் வை ராஜா வை ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒரு புதிய படமொன்றை இயக்கவிருக்கிறாராம். இந்த கதைக்களம் தமிழ் சினிமாவுக்கே புதியது என்று கூறப்படுகிறது.

அதாவது சினிமாவில் பணிபுரியும் சண்டை பயிற்சி மாஸ்டர்களை கொண்டாடும் விதமான புதுமையான கதையாம் இது.

எனவே, இப்படத்திற்கு ‘சினிமா வீரன்’ என தலைப்பிட்டு இருக்கிறார் இயக்குனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, குதுப் இ க்ரிபா என்பவர் பின்னணி இசை பணிகளை கவனிக்கிறார்.