மீண்டும் அஜித்துடன் இணைந்து ‘மிரட்டல்’ விடும் முருகதாஸ்..?


மீண்டும் அஜித்துடன் இணைந்து ‘மிரட்டல்’ விடும் முருகதாஸ்..?

அஜித்தை தல என்று அன்புடன் ரசிகர்கள் அழைக்க காரணமாக இருந்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.

அஜித் நடித்த, தீனா படத்தில் இயக்குனராக அறிமுகமான இவர், தற்போது இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்களின் ஆஸ்தான இயக்குனர் ஆகிவிட்டார்.

எனவே, மீண்டும் அஜித்துடன் இணைய மாட்டாரா? என ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

இந்நிலையில தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் கண்கள் மட்டும் தெரியும் ஒரு போஸ்டரை வைத்துள்ளார் முருகதாஸ்.

இந்த போஸ்டர் முருகதாஸ் இயக்கவிருந்த மீண்டும் அஜித் நடிக்கவிருந்த மிரட்டல் படத்தின் டிசைன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இதன் மூலம் தான் மீண்டும் அஜித்துடன் இணையவிருக்கிறேன் என்று முருகதாஸ் சொல்ல வருகிறார் போலும்…