விஜய்க்கு குருவி… சூர்யாவுக்கு ஆதவன்… அஜித்துக்கு……?


விஜய்க்கு குருவி… சூர்யாவுக்கு ஆதவன்… அஜித்துக்கு……?

விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் உதயநிதி. அதன் பின்னர் சூர்யா நடித்த ஆதவன் படத்தை தயாரித்து, அதில் சிறிய வேடத்தில் தோன்றினார்.

தற்போது முழுநேர நடிகராக மாறி கெத்து காட்டி வருகிறார். அஹ்மத் இயக்கத்தில் நடித்துள்ள மனிதன் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, மஞ்சிமாவுடன் உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் உதயநிதி கலந்து கொண்டபோது அஜித் நடிக்கும் படத்தை எப்போது தயாரிப்பீர்கள் என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த உதயநிதி… “ஏஆர் முருகதாஸ் சாருடன் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அஜித் சார் எப்போ ஓகே சொல்வாரோ அப்போ படம் ரெடி’ என பதிலளித்தார்.