அஜித்துக்கு மே 1… விஜய்க்கு மே 2… காத்திருக்கும் ரசிகர்கள்…!


அஜித்துக்கு மே 1… விஜய்க்கு மே 2… காத்திருக்கும் ரசிகர்கள்…!

மே 1ஆம் தேதி என்றாலே தொழிலாளர் தினம்தான் நினைவுக்கு வரும். சினிமா ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்த நாளும் நினைவுக்கு வரத்தான் செய்யும்.

இவ்வருடம் வரவிருக்கும் இந்த நாள், அஜித் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷத்தை தரும் எனக் கூறப்படுகிறது.

அன்றைய தினம், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 57 படத்தின் பூஜை இடப்படும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மே 2ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு செய்தி காத்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ‘தளபதி 60′ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது. மொத்தம் மூன்று நாட்கள் மட்டுமே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.

எனவே, இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பை மே 2ஆம் தேதி சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் தொடங்கவிருக்கிறார்களாம்.

அப்போது விஜய் ஆடும் ஒரு பாடல் காட்சி மற்றும் இதர காட்சிகளை படமாக்கவிருக்கிறாராம் பரதன்.