சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து தல அஜித்!


சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து தல அஜித்!

முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்திற்கே பெரிய தொகையை முதலீடு செய்து வருகின்றனர். எனவேதான் தமிழில் முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் இணைந்து நடிப்பதில்லை. இவர்களின் சம்பளமே பெரிய பட்ஜெட்டாக இருப்பதால் இணைந்து நடிப்பதை தவிர்த்து வருகின்றர்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் புதிய சம்பளப் பட்டியல் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம்.

இவரைத் தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் இதோ…

கமல் ரூ. 20 கோடியை பெறுகிறார். ஆனால் தற்போது அஜித் இவரை முந்தி ரூ. 25 கோடியை சம்பளமாக பெறுகிறார். இவர்களைத் அடுத்து விஜய் மற்றும் சூர்யா தலா ரூ. 20 கோடி பெறுகின்றனர்.

விக்ரம் ரூ.12 கோடி, தனுஷ் ரூ.10 கோடி, கார்த்தி ரூ. 6 கோடி, விஷால் ரூ.5 கோடி, சிம்பு ரூ.4 கோடி, ஆர்யா ரூ.3 கோடி, ஜெயம் ரவி ரூ.3 கோடி, ஜீவா ரூ. 2.5 கோடி, விஜய்சேதுபதி ரூ.2 கோடி பெறுகின்றனர்.

எக்ஸ்ட்ரா டிப்ஸ்… மலையாள சினிமாவில் மோகன்லால் ரூ. 4 கோடியை சம்பளமாக பெறுகிறார். மம்மூட்டி ரூ.3.5 முதல் 4 கோடியும். திலீப் ரூ. 2 கோடியும், ப்ருத்விராஜ் ரூ. 1.5 கோடியும் பெறுகின்றனர்.