‘மங்காத்தா டே’ கொண்டாடும் அஜித் ரசிகர்கள்..!


‘மங்காத்தா டே’ கொண்டாடும் அஜித் ரசிகர்கள்..!

அஜித்துடன் ‘ஜி’, விஜய்யுடன் ‘சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் நடித்த வெங்கட்பிரபு அடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்தார். ‘சென்னை 600028’ல் தொடங்கிய இவரது இயக்கம் சிக்ஸர் அடிக்க தொடங்கியது. அதன்பின்னர் ‘சரோஜா’, ‘கோவா’ படங்களை இயக்கினாலும் அஜித்துடன் இவர் ஆடிய ‘மங்காத்தா’ இவரை முன்னணி இயக்குனராக உருவாக்கியது.

‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, வைபவ், மஹத், ப்ரேம்ஜி, விஜய் வசந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நட்சத்திர கூட்டமே நடித்திருந்தனர். இப்படம் அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது.

இதில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பேசப்பட்டது. யுவன் இசையமைக்க தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார். இப்படம் இயக்குனருக்கு சிறந்த இயக்குனருக்கான விஜய் அவார்ட்ஸ், எடிசன் அவார்ட்ஸ் உள்ளிட்ட விருதுகளை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இன்றோடு (ஆகஸ்ட் 31ஆம் தேதி) இப்படம் வெளியாகி 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனவே.. அஜித் ரசிகர்கள் இப்படத்திற்கு #4YearsOfBlockbusterMankatha என ஹேஷ்டேக் கிரியேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இன்று ‘மண்டே இல்லடா.. மங்காத்தா டே’ எனவும் கூறி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.