எம்ஜிஆர்-ரஜினிகாந்த் வழியில் செல்கிறாரா அஜித்..?


எம்ஜிஆர்-ரஜினிகாந்த் வழியில் செல்கிறாரா அஜித்..?

தமிழகத்தில் அஜித்துக்கு இருக்கும் ரசிகர் வட்டம் நாம் அனைவரும் அறிந்ததே. தனது ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னும் இவரது படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் கோலிவுட்டையே அதிர செய்கிறது.

தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு எந்த வித விளம்பரமும் இன்றி உதவி வருகிறார். எம்ஜிஆரை போல் பல உதவிகளை மறைமுகமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தீவிர சாய்பாபா பக்தரான இவர் ரஜினியை போல் ஆன்மிகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறார். விரைவில் பாபாவுக்கு கோயில் கட்டும் திட்டத்தை வைத்திருக்கிறாராம்.

இதையெல்லாம் அறிந்த தேசிய கட்சி ஒன்று அஜித்திக்கு வலை வீசு வருகிறது. எப்படியாவது தங்கள் கட்சியில் அஜித்தை சேர்த்துவிட்டால் தமிழகத்தில் நாம் காலூன்றி விடலாம் எனக்கு கணக்கு போடுகிறதாம் அந்த கட்சி.